பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024: 52 வருட பகைக்கு பழி தீர்த்த இந்தியா!
Paris 2024 Paris Olympics INDvAUS
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில், ஹாக்கி லீக் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 3-2 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
இதன் மூலம் ஒலிம்பிக் ஹாக்கி வரலாற்றில், 52 வருடங்களுக்கு பின் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் லீக் ஆட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த பன்னிரண்டு அணிகளை தலா 6 அணிகளாக பிரிப்பட்டு உள்ளது. இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இந்திய வீரர் ஹர்மன்பிரித் மேலும் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 10 புள்ளிகள் பெற்று 2வது இடம்பிடித்து, காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று விட்டது.
English Summary
Paris 2024 Paris Olympics INDvAUS