த.வெ.க. 2-ம் ஆண்டு தொடக்கம்: தலைவர்களின் சிலைகளை இன்று திறந்து வைக்கிறார் விஜய்!
Vijay to unveil statues of leaders today
தமிழக வெற்றிக்கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது.அப்போது தலைவர்களின் சிலையை திறந்து வைத்த பின் தனது சுற்றுப்பயண விவரத்தை நடிகர் விஜய் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் லச்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாக தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை நடிகர் விஜய் அறிவித்தார்.
இந்தநிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க உள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து, இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளையும் அலுவலகத்தில் விஜய் திறந்து வைக்கிறார்.இதையடுத்து நல உதவிகளையும் அவர் வழங்க இருக்கிறார். அப்போது அதனைத்தொடர்ந்து விஜய் தனது சுற்றுப்பயண விவரத்தை அறிவிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது .
English Summary
Vijay to unveil statues of leaders today