ரஷியா,உக்ரைன் போர்.பின்வாங்கிய வடகொரிய வீரர்களை வெளியேற்றிய ரஷியா..!
Russia expels North Korean soldiers from Ukraine
உக்ரைனின் சரமாரி தாக்குதலில் பலர் இறந்ததால் வடகொரியா வீரர்களை பின்வாங்கும் கட்டாயம் ரஷியாவுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என உக்ரைன் ராணுவ செய்தித்தொடர்பாளர் அலெக்சாண்டர் கிண்ட்ராடென்கோ தெரிவித்துள்ளார்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் பலர் கொல்லப்பட்டனர்,மேலும் இந்த போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது. மேலும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் ராணுவம் இந்த போரை எதிர்கொண்டு வருகிறது
மேலும் இந்த போருக்கு நட்பு நாடான வடகொரியா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பியது. அப்போது ரஷியா அந்த வீரர்களை உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள குர்ஸ்க் பிராந்திய எல்லை அருகே நிறுத்தியது.
ஆனால் உக்ரைனின் தாக்குதல் மற்றும் மோசமான வானிலையை அவர்களால் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை என கூறப்படுகிறது . இதனால் சுமார் 4 ஆயிரம் வடகொரிய வீரர்கள் காராணுவ வீரர்களை அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.
இந்தநிலையில் உக்ரைனின் சரமாரி தாக்குதலில் பலர் இறந்ததால் வடகொரியா வீரர்களை பின்வாங்கும் கட்டாயம் ரஷியாவுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என உக்ரைன் ராணுவ செய்தித்தொடர்பாளர் அலெக்சாண்டர் கிண்ட்ராடென்கோ தெரிவித்துள்ளார்.
English Summary
Russia expels North Korean soldiers from Ukraine