ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்று சாதனை! பதக்க வேட்டையில் இந்தியா - பிரதமர் மோடி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி 16 விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்தியாவின் பதக்க கணக்கை துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் பெற்று தொடங்கி வைத்துள்ளார்.

இந்த நிலையில், இன்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவு வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில், மனுபாக்கர் - சரப்ஜோத் சிங் ஜோடி  தென்கொரியாவின் யெஜின்-வோன்ஹோலீ ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி சிறப்பாக தங்களது திறமையை வெளிப்படுத்தி, 16-10 என்ற கணக்கில் கொரியா ஜோடியை வீழ்த்தி உள்ளது.

இதன் மூலம் இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்துள்ளது. மேலும், ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனையாக மனுபாக்கர் சாதனை புரிந்துள்ளார்.

இந்த நிலையில், பதக்கம் வென்ற மனு பாக்கர்- சரோப்ஜோத் இணைக்கு நாட்டின் பல்வேறு தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "எங்கள் துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து எங்களை பெருமைப்படுத்துகிறார்கள்!

மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஒலிம்பிக்ஸில் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்துகள். இருவரும் சிறப்பான திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர். 

இந்தியா நம்பமுடியாத மகிழ்ச்சியில் உள்ளது. மானுவைப் பொறுத்தவரை, இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் ஆகும். இது அவரது நிலையான சிறப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது" என்று பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paris Olympics Olympic India Manu Bhaker PM Modi  


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->