பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் ஆரம்பமாகும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.! - Seithipunal
Seithipunal


பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் ஆரம்பமாகும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.!

இன்று ஆரம்பமாக உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளது. நாளை முதல் 22-ம் தேதி வரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 

இந்தக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, பாராளுமன்ற செய்தி இதழில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

பொதுவாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளில் அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் வரை விவாதிக்கப்படும். அந்த வகையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. 

இந்த மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, வழக்கறிஞர்கள் மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன. 

மேலும், இந்தக் கூட்டத்தொடரில் பாராளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும்  தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. புதிய பாராளுமன்ற வளாகத்தில் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கர் நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

parliment special session starts from today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->