தீ பிடித்ததாக பரவிய வதந்தி - ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணிகள் - ஜார்கண்டில் சோகம்..!! - Seithipunal
Seithipunal


ஜார்கண்ட் மாநிலத்தில் ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி பரவியதையடுத்து ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் தண்டவாளத்தில் குதித்த போது எதிரே வந்த சரக்கு ரயில் மோதி மூன்று பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தின் விவரம் வருமாறு : ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் குமண்டி ரயில் நிலையம் உள்ளது. அந்த ரயில் நிலையத்தின் அருகே நேற்று இரவு 8 மணியளவில் ராஞ்சி  மற்றும் சாசராம் இடையே செல்லும் விரைவு ரயில் வந்துள்ளது.

அப்போது சாசராம் ரயிலில் தீ பிடித்து விட்டதாக சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வதந்தி பரப்பி உள்ளனர். இந்த வதந்தியை உண்மை என்று நம்பிய ராஞ்சி - சாசராம் ரயிலில் பயணித்த பயணிகள் பலர் ஓடும் ரயிலில் இருந்து தண்ட வாளத்தில் குதித்து தப்பியோட நினைத்துள்ளனர். 

ஆனால் அப்போது எதிரே உள்ள தண்ட வாளத்தில் அந்த நேரம் சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது. இதில் சாசராம் ரயிலில் இருந்து குதித்த பயணிகளில் மூன்று பேர் அந்த சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் 4 பேர் இந்த சரக்கு ரயில் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து இவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ரயிலில் தீ பிடித்துள்ளதாக வதந்தி பரப்பியது யார் என்றும் விசாரித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Passengers Jumped Onto the Tracks Over The Rumours Of Fire On The Train


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->