ஏனாமில் நாளை துவங்குகிறது மக்கள் திருவிழா..துப்புரவு பணியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மல்லாடி!
People's festival begins in Yanam tomorrow Former minister Malladi engaged in cleaning work
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் மக்கள் திருவிழாவையொட்டி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் துப்பரவு பணியை மேற்கொண்டனர்.ஏனாமில் தனியார் சார்பில் குப்பை அள்ளும் டெண்டர் எடுக்கப்பட்ட நிலையில் சரியான முறையில் குப்பைகளை அப்புறப்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்ததநிலையில் இந்த பணியை மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் மக்கள் திருவிழா நாளை முதல் 8-ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ளது.இதற்க்கான எற்பாடுகளை புதுச்சேரி அரசு தீவிரமாக செய்துவருகிறது, இந்த ஏனாம் மக்கள் திருவிழாவில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தநிலையில் ஏனாமில் தனியார் சார்பில் குப்பை அள்ளும் டெண்டர் எடுக்கப்பட்ட நிலையில் சரியான முறையில் குப்பைகளை அப்புறப்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை ஏனாம் மக்கள் திருவிழாவில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளததால் டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஏனாம் முழுவதும் துப்புரவு பணியை மேற்கொண்டனர்.தனியார் சார்பில் குப்பை அள்ளும் டெண்டர் எடுக்கப்பட்ட நிலையில் சரியான முறையில் குப்பைகளை அப்புறப்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்தப்பணியை மல்லாடி கிருஷ்ணா ராவ் செய்துள்ளார்.
மேலும் ஏனாமில் நாளை மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஏற்பாடுகள் குறித்து டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணா ராவுடன் ஆய்வு மேற்கொண்டார்.
English Summary
People's festival begins in Yanam tomorrow Former minister Malladi engaged in cleaning work