தெலுங்கானா || அடிங்க.. ஆனால் சாப்பாடு குடுத்துட்டு அடிங்க... கண்ணீருடன் கதறிய திருடன்.!  - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டம் எல்லா ரெட்டி கூடம் கிராமத்தில் நேற்று வாலிபர் ஒருவர் அங்குள்ள வீடுகள் மற்றும் கோவிலை நோட்ட மிட்டபடி அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார். அதைப் பார்த்த அந்த ஊர் பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகமடைந்த ஊர் பொதுமக்கள் வாலிபரை பிடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து உதைத்தனர். அப்போது அந்த வாலிபர் கதறி அழுதார். எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்கள். ஆனால் என்னால் பசி தாங்க முடியவில்லை. சாப்பாடு கொடுங்கள் என்று அழுதார். 

இதைக்கேட்டு அடித்ததை நிறுத்திய பொதுமக்கள் புளியோதரை கொண்டு வந்து அவர்களே ஊட்டி விட்டனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் என்பதும், வீடுகளில் திருட வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசை கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples food provide to thief in telangana


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->