ஆதார் இல்லாமலும் வாக்களிக்கலாம் - தலைமை தேர்தல் ஆணையர் தகவல்.! - Seithipunal
Seithipunal


நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி மேற்கு வங்காள மாநிலத்தில் பெரும்பாலான சிறுபான்மையினர் மற்றும் எஸ்.சி எஸ்.டி சமூகத்தைச் சார்ந்தவர்களின் ஆதார் அட்டைகளை மத்திய அரசு முடக்கி இருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், பாராளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாஜக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆதார் எண்கள் முடக்கப்பட்டாலும் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது:- “ஆதார் எண்கள் முடக்கப்பட்டது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆதார் எண்கள் முடக்கப்பட்டாலும் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்" என்றுத் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples vote without adhar card chief election commissioner info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->