பி.எப்.ஐ அமைப்பு தடை உத்தரவு : அரசாணையை வெளியிட்ட புதுச்சேரி.! - Seithipunal
Seithipunal


பி.எப்.ஐ என்ற இஸ்லாமிய அமைப்பின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது தொடர்பாக, நாட்டில் 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிரடி சோதனையை மேற்கொண்டது.

இந்த சோதனையின் போது பலர் கைது செயப்பட்ட நிலையில், சர்ச்சைக்குரிய பல ஆவனங்களும், கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, பிஎப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக அறிவித்தது.

மேலும், இந்த அமைப்புகளுக்கு  மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் செயல்பட ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவையும் பிறப்பித்தது. 

இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தும் விதமாக பல்வேறு மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. அந்த வகையில் மத்திய அரசின் இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தில் பிஎப்ஐ அமைப்புக்கு தடைவித்து தமிழக அரசு நேற்று அதிகாரப்பூர்வமான அரசாணையை வெளியிட்டது.

இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பிஎப்ஐ அமைப்பை தடை செய்து இன்று அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pfi ban puthuchery govt isues ordinance


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->