கோவில் சுவர் இடிந்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிதியுதவி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெய்து வரும் மழையால் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. அதன் படி மத்திய பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

இந்த நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் ஷாபூரில் உள்ள ஹர்தௌல் பாபா கோவிலின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், பிரதமர் மோடி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- "ம.பி.யில் நடந்த விபத்து எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

காயமடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi compensation announce to temple wall collapse died childrens family in mp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->