ஈரான் அதிபர் மறைவு: பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல்.!
PM Modi condolence Iran president death
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்து விட்டார். அவருடன் சென்றவளும் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து முகமது முக்பர், ஈரான் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சையத் இப்ராஹிம் ரைசி மறைவால் வருத்தமும் பெரும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
இந்தியா ஈரான் இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். இப்ராஹிம் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.
English Summary
PM Modi condolence Iran president death