அடச்சே..! கடைசி நேரத்தில் இப்படியா சொதப்புவது? முதல் நாளிலேயே கடுப்பான இந்திய ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் ஆட்டம் இன்று மும்பையில் தொடங்கி நடந்து வருகிறது. 

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 65.4 ஓவரில், 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

அதிகபட்சமாக நியூசிலாந்து வீரர்கள் டெரில் மிட்செல் 82 ரன்னும், வில் யங் 71 ரன்னும் எடுத்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 18 பந்தில் 18 ரன் எடுத்து எப்போதும் போல ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தார். 

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் இணைந்த சுப்மன் கில், நிதானமாக ஆடி 50 ரன்களைக் கடந்தபோது ஜெய்ஸ்வால் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இன்னும் ஒரு சில ஓவர்களே இருந்தததால் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய முகமது சிராஜ் முதல் பந்திலேயே டக் அவுட் ஆக, வேறுவழியின்றி, களமிறங்கிய விராட் கோலி 4 ரன்னில் அவுட் ஆனார். 

ஒருவழியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டு இழப்பிற்கு 86 ரன்களுடன் உள்ளது. சுப்மன் கில் 31 ரன்னுடனும், ரிஷப் 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

கடைசி நேரத்தில் கொஞ்சம் நிதானத்தோடு, மட்டை வைத்து ஆடினால் என்ன இவர்களுக்கு என்று இந்திய ரசிகர்கள் கடுப்பில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்து வருகின்றனர் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs NZ test match day one


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->