ராயனை பின்னுக்கு தள்ளிய அமரன் திரைப்படம்!...முதல் நாள் வசூலில் இத்தனை கோடி வசூலா? - Seithipunal
Seithipunal


இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்'. திரைப்படத்திற்கு, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் அமரன் திரைப்படத்தின் முதல் காட்சியினை கண்டு களித்தனர்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பின் வெளியான அசுரன் திரைப்படத்தை விட முதல் நாள் வசூலில் நேற்று அமரன் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. அந்த வகையில், உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 34 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amaran movie that pushed rayan back does it collect so many crores on the first day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->