பாஜகவுக்கு பேரிழப்பு! ஹெச்.ராஜாவை சோகத்தில் ஆழ்த்திய மரணம்! - Seithipunal
Seithipunal


111 வயதுடைய பாஜகவின் மூத்த நிர்வாகி புலாய் பாய் மறைவுக்கு, அக்கட்சியை சேர்ந்த ஹெச்.ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பாரதிய ஜனதா கட்சியின் மிகவும் மூத்த உறுப்பினர் ஸ்ரீ நாராயண் என்கிற புலாய் பாய் அவர்கள் தனது 111வது வயதில் நேற்று காலமானார். 

முதுநிலை பட்டதாரியான புலாய் பாய் அவர்கள் கல்வி அதிகாரியாக பணிபுரிந்தவர். தீனதயாள் உபாத்யாய அவர்களால்  ஈர்க்கப்பட்ட புலாய் பாய் அவர்கள் தனது பணியை துறந்துவிட்டு 1974 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். அதே வருடம் பாரதிய ஜனசங்கம் அவரை வேட்பாளராக்கியது  புலாய் பாய் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

உத்தர பிரதேசத்தின் தியோரியாவின் நவுராங்கியா (தற்போது குஷிநகரின் கடா) தொகுதியில் இருந்து இரண்டு முறை ஜனசங்க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தார் அந்த தருணத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் அவரை அழைத்து நலம் விசாரித்தார். அப்போது புலாய் பாய் அவர்கள் வெளிச்சத்திற்கு வந்தார்.

திரு.யோகி ஆதித்யநாத் அவர்கள் 2022 ஆம் ஆண்டு உத்தர பிரதேச முதலமைச்சராக பதவியேற்றபோது புலாய் பாய் அவர்கள் சிறப்பு விருந்தினராக பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். 

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

பாரதிய ஜனசங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்காக 50 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய அவரது மறைவு கட்சிக்கு பேரிழப்பாகும். திரு.புலாய் மாய் அவர்களின் ஆன்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.  ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி" என்று ஹெச்.ராஜ தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP H Raja Condolence to Pulai Bhai death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->