பிரதமர் மோடி புதிய இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்! - Seithipunal
Seithipunal


புதுடெல்லி: 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 27 அன்று தொடங்கி வைத்தார். 9-வது ஆயுர்வேத தினத்தையொட்டி, டெல்லியில் நடைபெற்ற விழாவில் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத் திட்டங்களும், 18 மாநிலங்களில் பல்வேறு புதிய திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. 

இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சையை பெறலாம். இந்த புதிய திட்டம் மூலம் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பேச்சில், இது பாஜகவின் தேர்தல் வாக்குறுதி என்று குறிப்பிடப்பட்டதுடன், டெல்லி மற்றும் மேற்குவங்க மாநிலங்கள் திட்டத்தில் இணைக்காததால் அந்த பகுதிகளின் மூத்த குடிமக்கள் இந்த சலுகையைப் பெற முடியாது என வருத்தம் தெரிவித்தார்.

மருத்துவ சேவையில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தும் நோக்கத்தில், ஆந்திர மாநிலத்தின் அமராவதி எய்ம்ஸ் மருத்துவமனையில் ட்ரோன் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். ட்ரோன் மூலம் சிகிச்சைக்கு தேவையான மாதிரிகளை எளிதில் கொண்டுவரும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம், இந்தியாவின் மூலிகை மருத்துவத்துறை உலக அரங்கில் மேலும் வளம் பெறும் என்றும், நாட்டின் பாரம்பரிய மருத்துவ அறிவு செயற்கை நுண்ணறிவுடன் இணைந்தால் சுகாதாரத் துறையில் புதிய பரிமாணங்கள் திறக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi Launches New Free Medical Insurance Scheme


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->