#டிஜிட்டல்இந்தியா || இனி மக்கள் ஏடிஎம்-களை தேடி மக்கள் அலையவேண்டாம் - பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம் குறித்து பிரதமர் மோடி பேசிய விவரம் பின்வருமாறு :-

"மார்ச் மாதத்தில் 10 லட்சம் கோடி ருபாய் வரை யூபிஐ டிஜிட்டல் (Google pay, PayTM....,) பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது. ஒவ்வொரு நாளும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆன்லைன் பரிவர்த்தனைகள் நடந்துவருகிறது.

நாட்டில் உள்ள சிறிய உணவகங்கள், பூக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், பழக்கடைகளில் கூட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் பணத்தை எடுக்க ஏடிஎம்மை தேடி மக்கள் அலைய இனி தேவையில்லை. கையில் பணத்தை எடுத்துச் செல்லவும் தேவையில்லை. 

நாள் முழுக்க கையில் காசு இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் நம் தேவைகளை பூர்த்திசெய்ய பணம் செலுத்த முடியும். ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை உணர வேண்டும். தொழில்நுட்பத்தின் சக்கி ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

தற்போது கோடை காலம். தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவோர் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pm modi mann ki baat digital india


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->