அமெரிக்கா உடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை: லண்டனில் ஜெய்சங்கர் பேச்சு!
Our relations with US are excellent: Jaishankar in London
டாலருடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அமெரிக்கா உடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை என இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை நிறுத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி கடைசியில் தோல்வியில் முடிந்தது.இதையடுத்து போரை நிறுத்த பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அந்த முயற்சியை தொடங்கின.
இந்தநிலையில் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பிரிட்டன் சென்றடைந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் இருதரப்பு உறவு தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி டேவிட் லாமி உள்பட பலருடன் ஆலோசனை நடத்துகிறார்.இந்தநிலையில் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள தூதரகங்களையும் திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:நாம் இந்தியாவை தீவிரமாக உலகமயமாக்கி வருவதால், ரூபாயின் சர்வதேசமயமாக்கலை நாங்கள் தெளிவாக ஊக்குவிக்கிறோம் என கூறினார் . மேலும் அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்கின்றனர் என்றும் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகள் விரிவடைந்துள்ளன. இதனால், ரூபாயின் பயன்பாடும் அதிகரிக்கும் என பேசினார்.
மேலும் பல சமயங்களில் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே பணமில்லா பணம் செலுத்துவதற்கான வழிமுறைகளை நாங்கள் நிறுவியுள்ளோம் மற்றும் வர்த்தகத் தீர்வுகளை ஆதரித்துள்ளோம் என கூறிய இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்,இந்தியாவின் உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக ரூபாய் பரிவர்த்தனைகளின் நிலையான வெளிப்புறமயமாக்கலை இது பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் டாலரின் பங்கு குறித்து நாங்கள் யதார்த்தமாக இருக்கிறோம் என்றும் டாலருடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அமெரிக்கா உடனான எங்கள் உறவுகள் மிகச் சிறந்தவை. டாலரை குறைப்பதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை என இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
English Summary
Our relations with US are excellent: Jaishankar in London