அதிபரை போல ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார் பிரதமர் மோடி...ஒரே நாடு ஒரே தேர்தல்'குறித்து வைகோ பேட்டி! - Seithipunal
Seithipunal



ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது  நடைமுறையில் சாத்தியமற்றது. எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரே தேர்தல் என்பது கிடையாது.இதை எதிர்க்க மக்களுடன் இணைந்து போராடவேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

லோக்சபா, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து ஆராய்ந்து, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, இந்தாண்டு மார்ச் மாதத்தில் இந்தக் குழு தன் அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.

இதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சாத்தியம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை பல கட்டங்களாக செயல்படுத்தலாம் என்றும், அதற்காக பல சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக, பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். இந்த தேர்தல் நடந்த 100 நாட்களுக்குள், மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தலாம். அடுத்த கட்டத்தில், இவற்றை ஒருங்கிணைத்து தேர்தல் நடத்தலாம் என, பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பான மசோதா தயாரிக்கப்பட்டது.

இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 

இந்தநிலையில் திண்டுக்கல் கோர்ட்டில் தேர்தல் தொடர்பான வழக்கில் ஆஜராக வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள மக்கள் கிளந்தெழவேண்டிய பிரச்சினை 'ஒரே நாடு ஒரே தேர்தல்' பிரச்சினை. இது நடைமுறையில் சாத்தியமற்றது. எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரே தேர்தல் என்பது கிடையாது. மூன்று மாநில அரசுகள் கவிழ்ந்து விட்டது என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? இது எப்படி சாத்தியம்.

பிரதமர் பதவி வேண்டாம், அமெரிக்க அதிபரை போல ஆகிவிட வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறார். பொது சிவில் சட்டத்தை எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றியவர்கள் இவர்கள். ஹிட்லர், முசோலினி, இடி அமீன் போன்ற மனப்பான்மை பிரதமரிடம் உள்ளது. 'ஒரே நாடு ஒரே தேர்தலை' எதிர்க்க மக்களுடன் இணைந்து போராடவேண்டும்.

வாரணாசியில் நடந்த சனாதன மாநாட்டில் இந்தியா என அழைக்கக் கூடாது பாரத் என்றே அழைக்க வேண்டும். தலைநகரை வாரணாசிக்கு மாற்றவேண்டும். முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு ஓட்டுரிமை கூடாது என தீர்மானம் நிறைவேற்றயுள்ளனர். இது தான் அவர்களின் நோக்கம். சர்வாதிகார மனப்பான்மை கொண்டுள்ள நரேந்திர மோடி மக்களால் தூக்கி எறியப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi wants to become like President Vaiko talks about One Nation One Election


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->