"இளம் புயல்" பிரக்ஞானந்தாவை நேரில் பாராட்டிய பிரதமர் மோடி.!
PM modi wishes to pragnananda
"இளம் புயல்" பிரக்ஞானந்தாவை நேரில் பாராட்டிய பிரதமர் மோடி.!
அஜர்பைஜானின் தலைநகர் பாகுவில் பிடே உலகக்கோப்பை செஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், 'நம்பர் ஒன்' வீரரும், ஐந்து முறை உலக சாம்பியன் வென்றவருமான மாக்னஸ் கார்ல்செனும் போட்டி போட்டுள்ளனர்.
இதில், கார்ல்சென் வெற்றி பெற்றார். இளம் வயதிலேயே மிகச் சிறப்பாக விளையாடி 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு தலைவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், இரண்டாவது இடம் பெற்ற பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை பிரதமர் மோடி தனது இல்லத்துக்கே அழைத்து பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக பிரக்ஞானந்தா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையான தருணம். என்னையும் என் பெற்றோரையும் ஊக்கப்படுத்திய உங்கள் அனைத்து வார்த்தைகளுக்கும் நன்றி" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
PM modi wishes to pragnananda