வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடிய கூட்டத்தொடராக அமையும் - பிரதமர் நரேந்திர மோடி பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று தொடங்கியுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர், வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடிய கூட்டத்தொடராக அமையும் என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று சிறப்புக் கூட்டத்தொடா் தொடங்கியுள்ளது. அக்கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடப்பது இன்றே கடைசி. நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடக்கும்.

இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில், "தற்போது நடக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் குறுகிய காலமாக நடக்கிறது என்றாலும், மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமைய உள்ளது.

இந்தியாவின் 75 ஆண்டுகால பயணமானது புதிய இடத்திலிருந்து தொடங்கவுள்ளது. 2047-ல் வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதே இலக்கு. இதற்கான அனைத்து முடிவுகளும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எடுக்கப்படும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தோ்தல் ஆணையா்களை நியமிப்பதற்கான மசோதா உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு இந்த சிறப்பு கூட்டத்தொடரில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmmodi Special session New parliament building


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->