ஒடிசா ரெயில் விபத்து - வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


ஒடிசா ரெயில் விபத்து - வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை.!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மூன்று ரெயில்கள் மோதி பெரியளவில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 294 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ரெயில் விபத்து தொடர்பான வதந்திகள் பரவி வருவதை போலீசார் கண்காணித்தனர். அதன் பின்னர் ரெயில் விபத்து குறித்து வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒடிசா காவல்துறையினர் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாலசோர் மாவட்டத்தில் நடைபெற்ற ரெயில் விபத்துக்கு சிலர் சமூக ஊடகங்கள் மூலம் மதவாத வண்ணம் கொடுப்பது துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளனர்.

வலைத்தளங்களில் தவறான நோக்கமுள்ள பதிவுகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும். வதந்திகளை பரப்பி மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police action against spreading rumours in social media about odisa train accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->