தங்கம் வாங்க ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம்; ஒப்புக் கொண்டுள்ள ரன்யா ராவ்..!
Ranya Rao admits to using hawala money transfer to buy gold
தங்கக்கடத்தலில் ஈடுபட்டதாக கன்னட நடிகை பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ஹரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரன்யா ராவ், ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டுள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை ரன்யா ராவ் கடத்தி வந்தார். இவர் கர்நாடக கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ் மகளும், நடிகையுமான இவர், கடந்த 03-ஆம் தேதி இரவு வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ரன்யா ராவ் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, இதனை எதிர்த்து ரன்யா செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
குறித்த மனு விசாரணைக்கு வந்தது. இதன்போது, வருவாய் புலனாய்வு பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மது ராவ் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் ' வெளிநாடுகளில் தங்கம் வாங்க ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்ததை ரன்யா ராவ் ஒப்புக் கொண்டு உள்ளார்,' என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Ranya Rao admits to using hawala money transfer to buy gold