குஜராத் || கடையில் உணவு திருடிய நபர் - காரில் கட்டி அடித்து உதைத்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா நகரின் கன்கு தம்பலா பகுதியில் கார் ஒன்றின் முன்பகுதி மீது இளைஞர் ஒருவரை கட்டி வைத்து, அந்த காரிலேயே சுற்றி அடித்து, உதைத்து துன்புறுத்திய வீடியோ ஒன்று வைரலானது. இது தொடர்பாக போலீசார் விசாரித்தனர்.

அதில், அந்த நபர் உள்ளூர் கடையொன்றில் இருந்து பூச்சிக்கொல்லி மற்றும் உணவு ஆகியவற்றை திருட முயன்றுள்ளார். அப்போது அவரை, அந்த கடையின் உரிமையாளர் மற்றும் கடை ஊழியர்கள் பிடித்து கொண்டனர்.

பின்னர், கடையின் உரிமையாளர் அந்த நபரை அடித்து, உதைத்து, கார் ஒன்றில் கட்டி வைத்து, தம்பலா பகுதியில் சுற்றி சுற்றி வந்துள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார், உணவு திருடிய நபர் மற்றும் அவரை பிடித்து, கட்டி வைத்து தாக்கிய நபர்கள் என்று இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வலைத்தளங்களில் வைரலான அந்த வீடியோவிற்கு பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police case file two peoples in gujarat


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->