அசாமில் சக காவலரை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிள் கைது.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் சக காவலரை சுட்டுக்கொன்ற போலீஸ் கான்ஸ்டபிளை போலீசார் கைது செய்தனர்.

அசாம் மாநிலம் சாரெய்டியோவில் சோனாரி காவல் நிலையத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தீபக் ககாதி என்பவர் தனது சர்வீஸ் துப்பாக்கி மூலம் தன்னுடன் பணிபுரியும் சக காவலரான ககுல் பாசுமதரியை சுற்றுள்ளார். இதையடுத்து காவல் நிலையத்திலிருந்து மற்ற காவலர்கள் உடனடியாக பாசுமதரியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார் என்று சாரெய்டியோவின் காவல்துறை கண்காணிப்பாளர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த துப்பாக்கி சூடு நடத்திய கான்ஸ்டபிள் தீபக் ககாதியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்னும் கண்டறியப்படாத நிலையில் இது குறித்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police constable arrested for shooting fellow police in Assam


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->