புதுவை || வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை - மீனவருக்கு போலீசார் வலைவீச்சு.!!
police investigation girl harassment case in puthuchery
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முத்தியால்பேட்டை வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர் மீன்பிடி தொழில் செய்து வரும் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.
இதற்கிடையே பூவரசன் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு 16 வயதில் மகள் உள்ளார். தற்போது அவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இந்த பெண்ணின் வீட்டுக்கு பூவரசன் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
அதன் படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த பூவரசன் தனியாக இருந்த அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த சிறுமி நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து பக்கத்து வீட்டிற்குள் ஓடி மறைந்துகொண்டார்.

இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாய் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிந்து பூவரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே முத்தியால்பேட்டை சோலைநகர் பகுதியில் கடந்த 10 நாட்களில் 3 சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police investigation girl harassment case in puthuchery