நானே கடவுளின் அவதாரம்..  நாடகமாடிய போலி சாமியார்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


நான் கடவுளின் அவதாரம் என பொதுமக்களை ஏமாற்றிய போலி சாமியாரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செஞ்சி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் தெலுங்கானா மாநிலத்தில் ஆசிரமம் ஒன்று நடத்தி வந்துள்ளார்.‌ அந்த ஆசிரமத்தில் நான் கிருஷ்ணரின் அவதாரம் என்றும் நானே விஷ்ணுவின் மறு உருவம் எனவும் கூறி பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வந்துள்ளார்.

இதில் ஆசிரமத்தை நடத்தி வரும் சுரேஷுக்கு இரண்டு மனைவிகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் ஆசிரமத்தில் 5 தலை பாம்பு படுக்கை அமைத்து தனது மனைவிகளுக்கு ஸ்ரீதேவி, மூதேவி என பெயர் வைத்துள்ளார்.

இதனிடையே இந்த ஆசிரமத்திற்கு வந்தால் வாய் பேச முடியாதவர்கள் நன்றாக பேச முடியும் எனவும் நடக்க முடியாதவர்கள் நன்றாக நடக்க வைப்பதாகவும் அப்பகுதி மக்களிடையே சிலர் வதந்திகளை பரப்பியுள்ளனர். அதன் காரணமாக இந்த ஆசிரமத்தில் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக சாமியார் குறித்து அந்த பகுதியில் அதிக அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாமியாரை பார்க்க அதிக பக்தர்கள் கூட்டம் கூடியுள்ளது. 

இதில், கடவலா ராய்ச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது‌. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாமியாரிடம் விசாரணை நடத்தினர். அதில் நான் கடவுளின் அவதாரம் என அந்த சாமியார் தெரிவிக்க போலீசார் சாமியாரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police warning to fake samiyar in telungana


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->