அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த "பொன்னியின் செல்வன்" பட பாடகி.!!
ponniyin selvan movie singer rakshitha accident in maleysia
அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த "பொன்னியின் செல்வன்" பட பாடகி.!!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரக்ஷிதா. தனியார் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பாடிய இவர் கடந்த 2015-ம் ஆண்டு தெலுங்கில், இளையராஜா இசையில் வெளியான ‘எவடே சுப்ரமணியம்’ படத்தில் முதன் முறையாக பாடகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் பாடல்களைப் பாடி வருகிறார்.
அதிலும் குறிப்பாக சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’ என்ற பாடல் ரக்ஷிதாவை பிரபலமாக்கியது. அதேபோல், ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘காதரோம் சொல்’ என்ற பாடலையும் ரக்ஷிதா பாடியுள்ளார்.
இந்நிலையில், ரக்ஷிதா தனது ட்விட்டர் பக்கத்தில், மலேசியாவில் கார் விபத்தில் சிக்கியதாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘’இன்று காலை மலேசியா விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். அப்போது, நான் சென்ற கார் சாலை தடுப்பின் மீது மோதி சாலையோரத்தில் போய் விழுந்தது.
அந்த ஒரு சில நொடிகளில் எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் கண்முன் வந்து தோன்றியது. நடந்த நிகழ்வில் இருந்து மீளாமல் இன்னும் நான் அதிர்ச்சியிலேயே உள்ளேன். கார் ஓட்டுநர் மற்றும் என்னுடன் காரில் வந்த சக பயணிகளும் இந்த விபத்தில் இருந்து தப்பினர். ஏர் பேக்குகளுக்கு நன்றி.
அவர்களுக்கு வெளியில் லேசான காயங்களும், லேசான உள் காயங்களும் உள்ளன. நான் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம்" என்று பதிவிட்டுள்ளார். ரக்ஷிதாவின் இந்த ட்விட்டர் பதிவு, அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
ponniyin selvan movie singer rakshitha accident in maleysia