பரந்தூர் செல்லும் தவெக தலைவர் - இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை.!
tvk fans and outside peoples not allowed in tvk leader vijay meet paranthur peoples
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த சில வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களையும் போராட்ட குழுவினரையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சார்பில் காவல் துறையிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று போராட்டகுழுவினரையும், கிராம மக்களையும் சந்திக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் படி த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்களை இன்று சந்திக்கிறார்.
இந்தச் சந்திப்பு அங்குள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி .ஆனந்த் உறுதிபடுத்தி இருந்தார். இன்னும் சில மணித்துளிகளில் சந்திப்பு தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்தச் சந்திப்பில் பங்கேற்பதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரந்தூர் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், பரந்தூர் நோக்கி வரும் த.வெ.க. தொண்டர்கள், வெளிநபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அடையாள ஆவணங்கள் வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, விஜயை சந்திக்க வருவது 13 கிராம மக்கள்தான் என்பதை உறுதிப்படுத்த அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை காவல்துறை கேட்பதாக கூறப்படுகிறது. அடையாள ஆவணங்களை சரிபார்த்த பின் மண்டபத்திற்குள் காவல்துறை அனுமதி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
tvk fans and outside peoples not allowed in tvk leader vijay meet paranthur peoples