இந்தியாவிடம் இருந்து நாங்கள் பலவற்றை கற்றுக்கொண்டோம் - பிரேசில் அதிபர் நெகிழ்ச்சி!
praises Indian methods governance
இந்தியாவின் தலைமையில் உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 அமைப்பின் 18 ஆவது 2 நாள் முக்கியமான மாநாடு இந்தியா தலைநகரம் புதுடெல்லியில் நேற்று தொடங்கி இன்று முடிவடைந்தது.
இதனை அடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை பிரேசில் நாட்டு அதிபரிடம் ஒப்படைத்தார்.
அதனை பிரேசில் நாட்டு அதிபர் பெற்றுக் கொண்டார். இந்த மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக பிரேசில் அதிபர் தெரிவித்திருப்பதாவது, ''இந்தியா ஒரு உயரங்களை எட்ட போகும் நாடாகும். அதன் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
இந்தியாவிடம் இருந்து நாங்கள், ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெறும் நூற்றுக்கணக்கான சந்திப்புகளின் மூலம் ஆட்சி அமைப்பில் மக்களையும் முழுமையாக பங்கு பெற வைக்கும் புதிய வழிமுறையை கற்றுக் கொண்டோம்.
இப்போது இந்தியாவில் நடந்த மாநாட்டைப் போலவே அடுத்த வருடம் ஒரு மாநாட்டை நடத்துவோம்'' என தெரிவித்தார்.
English Summary
praises Indian methods governance