சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்.. போக்சோவில் கைது!
The young man who made the girl pregnant Arrested under POCSO
விருத்தாசலம் அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய திருமணமான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள சிலுப்பனூர் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் வீரமணி .இவனுக்கு வயது 26. திருமணம் ஆன இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமியிடம் பேசி பழகி வந்தததாக கூறப்படுகிறது . அப்போது ஆசைவார்த்தை கூறி அந்த சிறுமியை வீரமணி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் சிறுமிக்கு உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து சிறுமியை சிகிச்சைக்காக பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்ததை கேட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கர்ப்பமாக்கிய வீரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருத்தாசலம் அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய திருமணமான வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The young man who made the girl pregnant Arrested under POCSO