நடிகை ரூபினியிடம் 1.5 லட்சம் மோசடி..!
one lakhs money fraud to actor roobini
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ரூபினி, பிரபல நடிகர் ரஜினியுடன் 'மனிதன், ராஜா சின்ன ரோஜா' போன்ற படங்களிலும், கமலுடன் 'அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன்' மற்றும் விஜயகாந்துடன் 'புலன் விசாரணை' என்று பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டதையடுத்து, பல வருடமாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் இவரை பற்றிய செய்தி ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, நடிகை ரூபினியிடம் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய மற்றும் அங்குள்ள விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக சரவணன் என்ற நபர் ரூ.1.5 லட்சம் வாங்கியுள்ளார்.
ஆனால், அதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யாத அவர் திடீரென்று தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, ரூபினி அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
English Summary
one lakhs money fraud to actor roobini