கோடையில் புத்துணர்ச்சி தரும் உப்பு மற்றும் சர்க்கரை நீர் – உண்மையில் எவ்வளவு பயனளிக்கிறது?
Refreshing salt and sugar water in summer how beneficial is it really
கோடை வெயில் அதிகரித்துவிட்டால், உடல் நீர் இழப்பதோடு, அத்தியாவசிய தாது உப்புகளும் (Electrolytes) குறைகின்றன. இதை சமநிலைப்படுத்த உதவும் ஒரு எளிய மற்றும் இயற்கையான பானம் உப்பு மற்றும் சர்க்கரை நீர்.
ஏன் இந்த பானம் முக்கியம்?
வெயில் காரணமாக வியர்வை அதிகம் வெளியேறுவதால், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் குறைவதைத் தடுக்க உதவுகிறது.
உடல் சோர்வை குறைத்து, ஆற்றலை தரும்.
தசை பிடிப்பை தடுக்க உதவுகிறது, குறிப்பாக விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் உழைப்பு செய்பவர்களுக்கு ரொம்பவே பயன்படும்.
நீரிழப்பை சரிசெய்து உடலை நீரேற்றமாக (Hydrated) வைத்திருக்க உதவுகிறது.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை உட்கொண்டால், உடலுக்கு தேவையான சமநிலை கிடைக்கும்.
யார் குடிக்கக் கூடாது?
உயர் இரத்த அழுத்தம் (Hypertension) உள்ளவர்கள் அதிகமாக இதை குடிக்க வேண்டாம்.
உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்கள், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
அதிகம் எடுத்துக் கொண்டால், தேவையற்ற உப்பு சேர்த்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
இந்த பானத்தை முறையாக எடுத்துக் கொள்வது முக்கியம்.
நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதை மறந்துவிடக்கூடாது.
இயற்கை பானங்களை அதிகம் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
கோடையில் புத்துணர்ச்சி பெற நீங்களும் உப்பு மற்றும் சர்க்கரை நீரை சீராகச் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்!
English Summary
Refreshing salt and sugar water in summer how beneficial is it really