குடியரசுத் தலைவர் தேர்தல் : பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்.!
President candidate Draupadi Murmu nominate today
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
இதில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று நண்பகல் 12:30 மணியளவில் நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
அப்போது அவருடன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருப்பார்கள். குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளரின் வேட்பு மனுவை தலா 50 எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. திரௌபதி முர்முவின் வேட்புமனுவை பிரதமர் மோடி முதலில் முன்மொழிவார் என தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் திமுகவின் சார்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், எம்பி ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
English Summary
President candidate Draupadi Murmu nominate today