தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்!
TN Cabinet Change 13 feb 2025
தமிழக அமைச்சரவையில் இன்று ஒரு சின்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது, முக்கியமாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மேற்கொண்டு வந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, தற்போது அவர் கவனிக்கும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அமைச்சர் பொன்முடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இப்போது, வனத்துறை மற்றும் காதி-கிராம தொழில்கள் துறையையும் பொன்முடி ஒருங்கிணைத்து கவனிப்பார் என ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த மாற்றம், முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட பரிந்துரையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அதற்கு ஆளுநர் ஆர்.என். ரவி தனது ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN Cabinet Change 13 feb 2025