சுந்தர்-சியுடன் மீண்டும் லேடி கெட்டப்பில் 'வைகைப்புயல்' வடிவேலு..!
Vadivelu again in a lady character with Sundar C Movie
சுந்தர்.சி - நடிகர் வடிவேலு கூட்டனில் வந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவை. இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை மூன்று படங்களில் பணியாற்றியுள்ளனர்.
குறிப்பாக வின்னர் படத்தின் கைப்புள்ள கதாபாத்திரம் சினிமா உள்ளவரை வாழும் ஒரு கதாபாத்திரம். கைப்புள்ள பாத்திரத்தை ரசிக்காத மனிதர்களே இருக்க முடியாது. இன்று பார்த்தாலும் சிரிப்பு வர கூடிய காமெடி காட்சிகள் இருக்கும். அடுத்ததாக, தலைநகரம் படத்தின் நாய் சேகர், நகரம் படத்தின் ஸ்டைல் பாண்டி போன்ற கதாபாத்திரங்கள் என்றென்றும் ரசிக்க கூடியவை.
![](https://img.seithipunal.com/media/vadive-hmv2r.jpg)
இதற்கிடையில் 15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் காமெடி விருந்தாக இருக்க போகின்றது. அதாவது, வடிவேலுவின் பிறந்த நாளை முன்னிட்டு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'கேங்கர்ஸ்' படத்தின் அறிவிப்பு வெளியானது.
அதில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வடிவேலுவுடன், சுந்தர். சி இவர்களுடன் இணைந்து கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
![](https://img.seithipunal.com/media/gange-xbhmc.jpg)
காமெடி கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிகர் வடிவேலு 5 கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும், முக்கியமாக இந்த படத்தில் மீண்டும் லேடி கெட்டப்பிலும் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே "பாட்டாளி, நகரம், தலைநகரம்" ஆகிய படங்களில் லேடி கெட்டப்பில் நடித்துள்ளார் .இதனால் இந்த கேங்கர்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.
English Summary
Vadivelu again in a lady character with Sundar C Movie