கப்பற்படையை அலங்கரிக்க வரும் 'விந்தியகிரி'.!! நாட்டிற்காக அர்ப்பணிக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு.! - Seithipunal
Seithipunal


இந்திய கடற்படையில் நீலகிரி, ஹிம்கிரி, உதய கிரி, தாரகிரி உள்ளிட்ட 5 போர்க்கப்பல்கள் உள்ளன. இதனைத் தொடர்ந்து 'விந்திய கிரி' என்ற பெயரில் ஆறாவது போர்க்கப்பல் கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் கப்பல் கட்டும் நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 

வருகின்ற 17ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்த போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

மேலும் ப்ராஜெக்ட் 17 ஏ திட்டத்தின் கீழ் மும்பை எம்.டி.எல் நிறுவனத்தில் நான்கு கப்பல்களும், கொல்கத்தா ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனத்தில் 3 கப்பல்களும் கட்டுமானத்தில் உள்ளன. 

2019-2022 ஆம் ஆண்டுகளில் முதல் ஐந்து கப்பல்கள் தொடங்கப்பட்டன. அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பிளாட்பார்ம் மேனேஜ்மென்ட் சிஸ்டம்கள் போன்றவை இந்த போர்க்கப்பலில் உள்ளது என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். 

கப்பற்படை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, உள்நாட்டு பாதுகாப்பு திறன்கள் எதிர்காலத்தை 'விந்திய கிரி' போர்க்கப்பல் வலுப்படுத்தும். 

அதே சமயத்தில் வளமான கடற்படை பாரம்பரியத்துக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அடையாளமாகவும் திகழ்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president launch advanced frigate vindhyagiri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->