அத்வானியின் 95வாது பிறந்தநாள்.! நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த பிரதமர்.!
Prime Minister congratulated Advani on his 95th birthday
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 95வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கு நேரில் சென்று ரோஜா மலர் கொத்து கொடுத்து பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதுபற்றி அவர் டுவிட்டர் பதிவில், "இந்தியாவின் வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு மகத்தானது. அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் அறிவுத்திறன் காரணமாக இந்தியா முழுவதும் அவர் மதிக்கப்படுகிறார். பிஜேபியை கட்டியெழுப்புவதில் மற்றும் பலப்படுத்துவதில் ஈடு இணையற்றது. அவரது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் நான் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் அத்வானியின் வீட்டுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், "மதிப்பிற்குரிய அத்வானியின் இல்லத்திற்கு சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன். அவரது உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இறைவனை வேண்டி கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தற்போது மாஸ்கோவில் இருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
English Summary
Prime Minister congratulated Advani on his 95th birthday