தொடர் நிலநடுக்கம்: இந்தியா உதவி செய்ய தயார் - பிரதமர் மோடி..!!
prime minister modi announce india help to miyanmar for earthquake
மியான்மர் நாட்டின் மாண்டலே அருகே திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன. தாய்லந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மியான்மரின் மாண்டலே நகரில் உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் சுமார் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட பேரிடருக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:- "மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை கவலை அளிக்கிறது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
இந்தியா சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது. இது சம்பந்தமாக, அதிகாரிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவு அமைச்சகத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
prime minister modi announce india help to miyanmar for earthquake