இன்று வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் கடந்த மாதம் 29-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலச்சரிவுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரைக்கும் பலியானவர்கள் எண்ணிக்கை 420 ஆக உயர்ந்துள்ளது. 

ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி உள்பட பலர் சென்று பார்வையிட்டனர்.

 

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியான வயநாட்டுக்கு இன்று செல்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

பிரதமரின் இந்த பயணத்தின்போது, கேரளா அஆளுனர் ஆரிப் முகமது, முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இணைந்து செயல்படுவார்கள். பிரதமர் மோடியின் வயநாடு பயணத்தையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi going to wayanad


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->