இந்த முறை பத்ம விருதுகளை பழங்குடியினர் தான் அதிகளவில் பெற்றுள்ளனர் - பிரதமர் மோடி பேச்சு.!
prime minister modi speach in Mann Ki Baat programme
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்று கிழமை அன்று அகில இந்திய வானொலியில் "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி 2023 ஆம் ஆண்டின் முதல் "மன் கி பாத்" நிகழ்ச்சி இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில், பேசிய பிரதமர் மோடி, உங்களுடன் உரையாடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என்று கூறி தனது பேச்சை தொடங்கினார். இந்த நிகழச்சியில் மேலும் பேசிய அவர், "இந்த முறை பத்ம விருதுகளை, பழங்குடி சமூகத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் பழங்குடி சமூகத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் தான் அதிக அளவில் பெற்றுள்ளனர்.
பழங்குடி வாழ்க்கை, நகர வாழ்க்கையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அந்த சமூகம் அதற்கென சொந்த சவால்களை கொண்டுள்ளது. இவை அனைத்தும் இருந்தபோதும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
அவர்களுடைய மொழிகளான டோடோ, ஹோ, குய், குவி மற்றும் மண்டா உள்ளிட்டவைக் குறித்த ஆய்வு பணிகளில் ஈடுபட்ட பல பெரும் பிரபலங்கள் பத்ம விருதுகளை வென்றுள்ளனர். அது நம் அனைவருக்கும் ஒரு பெருமைக்கு உரிய விசயம்.
அதேபோல், சித்தி, ஜார்வா மற்றும் ஓன்ஜ் உள்ளிட்ட பழங்குடியினர் குறித்த ஆய்வு பணிகளில் ஈடுபட்டவர்கள் இந்த முறை பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
prime minister modi speach in Mann Ki Baat programme