சைப்ரஸ் நாட்டின் புதிய அதிபர் நிகோசுக்கு பிரதமர் மோடி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் மற்றும் ஆண்டிரியாஸ் மேவ்ராய்யன்னிஸ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

மொத்தம் 4.05 லட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்கள் ஓட்டு போட்ட இந்தத் தேர்தலில், 72.4 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதில் நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ்,  51.9 சதவீத வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

இதைத் தொடர்ந்து, நிகோசுக்கு பல நாடுகளில் இருந்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், சைப்ரஸ் நாட்டின் புதிய அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிகோசுக்கு இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "சைப்ரஸ் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிகோசுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்தியா மற்றும் சைப்ரஸ் நாட்டிற்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் நெருங்கி பணியாற்ற காத்திருக்கிறேன்" என்றுத் தெரிவித்து உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi wishes to cyprus president nicos


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->