இருமல் மருந்துகளை சோதனை செய்ய உயர் முன்னுரிமை வழங்க வேண்டும் - மத்திய அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இருமல் மருந்துகளை சோதனை செய்ய உயர் முன்னுரிமை வழங்க வேண்டும் - மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

மருந்து உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது. இங்கு மொத்தம்  3 ஆயிரம் மருந்து கம்பெனிகளும், 10 ஆயிரத்து 500 மருந்து உற்பத்தி கூடங்களும் உள்ளன. அங்கு தரமான, விலை மலிவான மருந்துகள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிலும், உலகளாவிய தடுப்பூசி தேவையில் 50 சதவீதத்தை இந்தியாதான் பூர்த்தி செய்து வருகிறது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு இருமல் மருந்து குடித்து காம்பியாவில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளும் பலியானார்கள். அதற்கு இந்தியாவில் தயார் செய்யப்பட்ட இருமல் மருந்துகளே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டினால், இந்தியாவில் தயாராகும் இருமல் மருந்துகளின் தரம் மீது உலக நாடுகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால், "இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு அவற்றை அரசாங்க ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்வது கட்டாயம்" என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் கடந்த 22-ந் தேதி அறிவித்தார். இந்த நடைமுறை, வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில், மத்திய அரசின் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரி, மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும், மத்திய ஆய்வுக்கூடங்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"இந்தியாவில் தயார் செய்யப்படும் இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்யும் போது பரிசோதனை கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இருமல் மருந்து கம்பெனிகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை உயர் முன்னுரிமை அளித்து பரிசோதனை செய்யுமாறும், விரைவிலேயே பரிசோதனை அறிக்கையை அளிக்குமாறும் மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வுக்கூடங்களுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priority of testing cough syrup central govt order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->