ராஜஸ்தான் முதலமைச்சருக்கு சிறை கைதி கொலை மிரட்டல்...!
Prisoner death threat to Rajasthan Chief Minister
ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் ஷர்மாவுக்கு நேற்று காலை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு மூலம் மர்மநபர் ஒருவர் இந்த மிரட்டலை விடுத்த்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீஸ் தீவிர விசாரணையை மேற்கொண்டது. அதில் சிறைச்சாலையில் இருந்தபடி ஒரு கைதி ஒருவர், இந்த மிரட்டல் விடுத்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. ஆதில் என்று சிறை கைதி மதுவுக்கு அடிமைகொண்டார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட்டுள்ளதோடு, சிறை கைதிக்கு எப்படி செல்போன் கிடைத்தது என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்க காரணம் என்ன என்ற வகையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Prisoner death threat to Rajasthan Chief Minister