வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி54 ராக்கெட்.! - Seithipunal
Seithipunal


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 'பி.எஸ்.எல்.வி-சி54' ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட் 960 கிலோ எடை கொண்ட 'ஓசன்சாட்03' என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்களை சுமந்து செல்கிறது. இவற்றில் இந்தியாவின் ஐ.என்.எஸ். 2பி, பிக்சல் இந்தியா நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைகோள், தைபோல்ட் 1, தைபோல்ட் 2 மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 4 ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைகோள்களும் அடங்கியுள்ளன.

மேலும் இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், 4 நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டது. இதில் முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PSLV C54 rocket successfully launched ISRO


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->