வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்; உலக அரங்கில் இந்தியா சாதனை..! - Seithipunal
Seithipunal


ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி60 ரக ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 

இந்த ராக்கெட்டில் 220 கிலோ எடை கொண்ட இரண்டு ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

பிஎஸ்​எல்வி சி-60 ராக்​கெட் மூலம் ஏவப்பட்டுள்ள விண்​கலன்கள் புவி​யில் இருந்து 470 கி.மீ தூரம் கொண்ட வெவ்​வேறு சுற்றுப்​பாதைகளில் நிலை நிறுத்​தப்பட உள்ளன. சில மாதங்​களுக்கு பிறகு அவற்றை ஒன்றிணைக்​கும் பணிகள் மேற்​கொள்​ளப்​படும்.

இந்திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்ரோ), எதிர்கால தேவையை கருத்​தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்​குள் விண்​வெளி​யில் நிறுவ திட்​ட​மிட்​டுள்​ளது. அதற்கான முன்​த​யாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன் ​ஒரு​பகு​தியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (SPADEX-Space Docking Experiment) எனும் திட்​டத்​தின்​கீழ் விண்​ணில் விண்​கலன்களை ஒருங்கிணைக்​கும் பணிகள் மேற்​கொள்​ளப்பட உள்ளன. 

இந்த இரட்டை விண்​கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்​ட​வை​. இவை பிஎஸ்​எல்வி சி-60 ராக்​கெட் வாயிலாக ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள ஏவுதளத்​தில் இருந்து இன்று இரவு சரியாக 10 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட்டு உள்ளது. இவை விண்ணில் 20 கிமீ தூரத்தில் வெவ்வேறு திசையில் நிலைநிறுத்தப்படும்.

செயற்கைக்கோள் இணைப்பு சோதனையை விண்வெளியில் வெற்றிகரமாக நடத்தி முடித்த நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் உள்ளன. அதற்கு அடுத்து உலக அரங்கில் விண்வெளி செயற்கைகோள் இணைப்பை மேற்கொண்ட 4வது நாடாக இந்தியா இடம்பெறும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PSLV C60 rocket successfully launched


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->