பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கூற ஜூலை 28 வரை அவகாசம் நீட்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்ய மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த வாரம் பொது சிவில் சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேபோன்று நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில்பொது மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அதனை ஏற்று மத்திய சட்ட அமைச்சகம் பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் கால அவகாசத்தை 2 வாரங்கள் நீட்டித்து வரும் ஜூலை 28ஆம் தேதி வரை பொதுமக்கள் பொது சிவில் சட்டம் தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Public comment time extended till July 28 on Union Civil code


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->