ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - காரணம் என்ன?

உலகில் மிக அதிகார மிக்க அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இந்தியாவின் தலைநகரான டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த மாநாட்டில் சுமார் 25 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிக் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், டெல்லி அரசும், மத்திய அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகைக்கு இன்று முதல் செப்டம்பர் 10-ந்தேதி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், 10-ம் தேதிக்கு பிறகு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் ஜனாதிபதி இல்லம் அறிவித்து உள்ளது. 

மேலும், ஜி20 மாநாட்டில் வெளிநாட்டு தலைவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public not allowed to visit president house


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->