புதுச்சேரி : 'பாம்' ரவி கொலை வழக்கில் 28 பேர் விடுதலை..ஒருவருக்கு மட்டும் சிறை தண்டனை..!!
Puducherry Bomb Ravi Murder Case 28 Aquitted
புதுச்சேரியில் உள்ள வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி 'பாம்' ரவி மற்றும் இவரது நண்பர் அந்தோணி, இருவரும் கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, சில மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப் பட்டனர்.
இதையடுத்து இந்த இரட்டைக் கொலையில் புதுச்சேரி முதலியார்பேட்டை போலீசார் மர்டர் மணிகண்டன் என்பவர் உட்பட 31 பேர் மீது வழக்குப் பதிவு விசாரணை நடத்தினர். இவர்களில் ஒருவர் தலைமறைவானதாலும், மற்றொருவர் புதுச்சேரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாலும், மற்ற 29 பேர் மீது மட்டும் புதுச்சேரி 3 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. அதில் இந்த இரட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப் படுவதாக புதுச்சேரி 3 ஆவது கூடுதல் அமர்வு நீதிபதி அறிவித்தார்.
மேலும் இந்த இரட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஒருவருக்கு மட்டும் ஆயுதம் வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 7 ஆண்டு சிறைத் தண்டனையும், மேலும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த இரட்டைக் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நபர் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரேம் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Puducherry Bomb Ravi Murder Case 28 Aquitted