டங்ஸ்டன் கனிம ஆய்வு.. எந்த அனுமதியும் வழங்கவில்லை - தமிழக அரசு விளக்கம்.!
tn government explain tungsten mining permission not granted
மதுரை மாவட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசு டெண்டர் விடுத்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு சார்பில் தெரிவித்து இருப்பதாவது;
"மத்திய அரசால் 24.06.2024- அன்று மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க ஏல அறிவிப்பு செய்யப்பட்டு, 07.11.2024 அன்று இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தினை தகுதியான நிறுவனமாக சுரங்க அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, அந்த நிறுவனத்திடமிருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை. அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை எனதெரிவிக்கப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tn government explain tungsten mining permission not granted